நாட்டுக்கான எந்த நல்லதொரு காரியத்திற்கும் தீர்க்கமான முடிவை தைரியமாக எடுப்பதில் பிரதமர் மோடியை போல் யாரும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் புடின் பேசியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஒரு வலுவான தலைவர். மேலும் நாட்டுக்கான எந்த நல்லதொரு காரியத்திற்கும் தீர்க்கமான முடிவை தைரியமாக எடுப்பதில் அவர் போல் யாரும் இல்லை.
உண்மையாக சொன்னால், சில நேரங்களில் இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அவரது கடுமையான நிலைப்பாட்டைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். மோடியை போல் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இவரது கொள்கையால், இவர் எடுக்கும் முடிவால் இந்திய, ரஷ்யா நாட்டு உறவுகள் நிலைத்தன்மை வாய்ந்ததாக, மாறாமல் பலமாக உள்ளது. இவ்வாறு புடின் தெரிவித்துள்ளார்.