சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த ஒரு நாள் கனமழைக்கே சாலைகள், குடியிருப்புகளில் கழிவு நீர் கலந்து மழை வெள்ளம் ஆறாக ஓடியது. மழை விட்டு இன்றோடு 6 நாட்கள் கடந்த பின்னரும் பல்வேறு இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தில் மக்கள் உள்ளனர். ஆனால் திமுக அரசோ எதையும் பற்றியும் கவலைப்படாமல் மெத்தனப் போக்கே கடைப்பிடித்து வருகிறது.
அதே போன்று பெரம்பூர் பகுதிகளில் மழைநீர் அதிக அளவு தேங்கி நின்றுள்ளது. இதனால் பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள மக்கள் சென்னை மேயர் பிரியா வீட்டை முற்றுகையிட்டு, தங்கள் பகுதிகளில் உள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்றி மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதனை எதிர்பார்க்காத மேயர் பிரியா என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்த பின்னரே மக்கள் அங்கிருந்த புறப்பட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.