திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று (டிசம்பர் 12) சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என குரல் எழுப்பியதால் விடியாத திமுக அரசின் அறநிலையத்துறை கயவாளிகள் அவர்களைக் கண்மூடித்தனமாக தாக்கியதில் வெளிமாநில பக்தர்களுக்கு ரத்தக்காயங்கள் ஏற்பட்டது. கோவிலுக்குள் ரத்தம் சிந்தப்பட்டதால் பரிகார பூஜைக்காக கோவில் நடை அடைக்கப்பட்டது. இது பற்றிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றிய வீடியோவை எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டு பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை. 42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பினர்.
ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், சன்னதி அருகே அவர்களை 3 செக்யூரிட்டிகள் மற்றும் காவலர் ஒருவர் தாக்கி உள்ளனர். இது குறித்து ஐயப்ப பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இதன் விளைவாக கோயில் வளாகத்திற்குள் இரத்தக்களரி ஏற்பட்டது.
இந்து சமயஅறநிலைத்துறையின் இந்த திமிர் பல காரணங்களில் ஒன்றாகும், தமிழக பாஜக, கோவில் நிர்வாகத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக, இந்து சமய அறநிலைத்ததுறைக்கு எதிராக திருச்சி மாவட்டப் பிரிவினர் இன்று கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்த உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சென்ற மாதம்தான் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ‘ஓம் நமச்சிவாய’ மந்திர கோஷம் போட்டவர்களை அறநிலையத்துறை விரட்டி அடித்தது நினைவு கூறத்தக்கது.