சென்னையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக பாஜகவினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மக்கள் உடமைகளை இழந்து பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்தனர்.
விடியாத அரசின் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. பல லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வந்தனர். அது போன்றவர்களுக்கு உதவுவதற்காக ஆர்.எஸ்.எஸ்., மற்றும் தமிழக பாஜக களத்தில் இறங்கியது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், பெட்ஷீட், பாய், மெழுகுவர்த்தி மற்றும் கொசுவலை உள்ளிட்டவைகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று சென்னை சோளிங்கநல்லூர் பகுதிகளில் சாலைகளில் தேங்கிய குப்பைகள் மற்றும் மழையால் பாதிப்படைந்த வீடுகளில் பாஜக சார்பில் தூய்மைப் பணிகளில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உதவிகளும் வழங்கப்பட்டது.