தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எப்போதுமே பிணத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள். அது போன்றவர்களுக்கு சென்னை மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.க.,வின் சேவையும், அர்ப்பணிப்பும் நடிப்பு, நாடகமாக திராவிட குஞ்சுகளுக்கு தெரிவதில் ஆச்சரியம் இல்லை என ஜான்சிராணி காட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது:
பிண அரசியல் செய்யும் திராவிட குஞ்சுகளுக்கு ஆர்எஸ்எஸ் பாஜக வின் சேவையும் அர்ப்பணிப்பும் நடிப்பு நாடகமாக தெரிவதில் ஆச்சரியம் இல்லை.
புயல் மழை வெள்ள பாதிப்பில் இருக்கும் மக்களின் மனவலி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., காரனை அரைக்கால் சட்டையோடு தெருவில் இறங்கி மக்களுக்கு குடிநீர் உணவு விநியோகம் செய்து அவர்களை பத்திரமாக மீட்டெடுக்கிறது.
இந்த வெள்ளத்தால் கூட ஏதேனும் ஆதாயம் தேட முடியுமா? இதிலும் ஏதாவது ஒரு கொள்ளை அடிக்க முடியுமா? என்ற திருட்டு புத்தி தான் உங்களை கேசவன் ஜீ, அண்ணாமலை ஜீ, சூர்யா ஜீ யின் சேவையை கூட கேலி பேச வைக்கிறது.
(இதைதான் பிறவி தரித்திரம் என்று நாங்கள் சொல்வது.)
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. அப்படி தான் ஆர்.எஸ்.எஸ்., தங்களின் சேவை அர்ப்பணிப்பிற்கு விளம்பரம் பிரதி பலன் தேடுவதில்லை. சக சேவகனின் படுகொலையை கூட பலிதானம் என்று கண்ணீரோடு கடந்து போகும் ஆர்.எஸ்.எஸ்., காரனின் சேவை உங்களை போல பிண அரசியல் செய்யும் தறுதலைகளுக்கு புரியாது.
இந்த நிலையில், கூட இது போல ஈன அரசியல் செய்ய உங்களால் மட்டுமே முடியும்.

ஆனால் ஒன்றை நினைவில் வையுங்கள்.
நீங்கள் பா.ஜ.க., காரனை ஏளனம் பேசினால் உள்நாட்டில் மட்டும் தான் பதிலடி கிடைக்கும். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., காரனை ஏளனம் பேசினால் உலகம் முழுவதும் இருந்து செருப்படி விழும். ஜாக்கிரதை. என குறிப்பிட்டுள்ளார்.
திராவிட போர்வையில் தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து வருவதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டு. அது போன்றவர்களால் உருவாக்கப்பட்ட ஐடிவிங்தான் தேவையின்றி மக்களுக்காக மழை வெள்ளத்திலும் உழைத்து வரும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை குறை கூறுகிறது. திராவிட போர்வை விரைவில் தோலுரிக்கப்படும். அப்போது அவர்கள் தமிழர்களால் விரட்டியடிக்கப்படுவார்கள் என்பது மட்டும் உண்மை.!