ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 11) தீர்ப்பு அளித்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பிற்கு எதிராகவும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும் திமுக எம்.பி. அப்துல்லா நாடாளுமன்றத்தில் பேசினார். அவரது கருத்துக்கு ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், ‘உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிரான கருத்தை இங்கு பேசக் கூடாது, என்று சொன்னார். இந்த கருத்தை ஏற்க முடியாது. என்ன பேசுகிறீர்கள், சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் கூறி எல்லை மீறி போகிறீர்கள் எனவே அமருங்கள் என்றார்.
இந்த நிலையில், திமுக எம்.பி., அப்துல்லாவின் பேச்சை எக்ஸ் வலைத்தளத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஷேர் செய்து கூறியிருப்பதாவது: திமுகவின் பிரிவினை வாதம் பேச்சை நாடாளுமன்ற அவையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரிவு 370 தற்காலிகமானது, ஆனால் திமுகவின் பிரிவினை நிரந்தரமானது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.