ஒடிசாவில் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டபோது, ரூ.350 கோடிக்கு மேல் ரொக்கப் பணத்தை கைப்பற்றினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட 8 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் எம்.பி., தீரஜ் வீடு மற்றும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் 350 கோடிக்கும் மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் ஊழலில் காங்கிரசின் பங்களிப்பினை கண்டிக்கும் விதமாக டிசம்பர் 11ம் தேதி திங்கட்கிழமை பிற்பகலில் 3 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அதற்கான சிறப்பு அழைப்பாளர்களின் பெயர் பட்டியலும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி முன்னாள் எம்.பி., பொன்.ராதாகிருஷ்ணன், சசிகலா புஷ்பா, பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. விருதுநகர் பொன்.பாலகணபதி சிவகங்கை கரு.நாகராஜன், கரூர் ஏ.பி.முருகானந்தம், திருவள்ளூர் வினோஜ் பி.செல்வம், ஆரணி ஏ.ஜி.சம்பத் முன்னாள் எம்.எல்.ஏ., கே.வெங்கடேசன், கிருஷ்ணகிரி கார்த்தியாயினி முன்னாள் மேயர், திருச்சிராப்பள்ளி கே.பி.ராமலிங்கம், கருப்பு முருகானந்தம் ஆகியோர் தலைமையில் மேற்கூறிய இடங்களில் ஊழலில் பங்களிப்பாக உள்ள காங்கிரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அப்போது பொதுமக்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊழல் முகத்தை தோலுரித்து காண்பித்தனர். இதில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.