கோவை மத்திய சிறையில் சோதனை மேற்கொண்டபோது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மத்திய சிறை எஸ்.பி., உத்தரவின் படி சிறை அலுவலர் சிவராசன் தலைமையில் சிறப்பு சோதனைக்குழுவினர் மத்திய சிறையில் நேற்று (டிசம்பர் 14) சோதனை மேற்கொண்டனர்.
சிறையின் மையப்பகுதியான 6வது அறையில் என்.ஐ.ஏ., வழக்கில் அடைக்கப்பட்டு இருந்த ஈரோட்டை சேர்ந்த ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீன் என்பவரிடம் சோதனையிட்டனர். அவரது பேண்ட் பாக்கெட்டில் காகிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கருப்பு மை கொண்டு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொடியை ஆசிப் வரைந்து வைத்துள்ளார்.
அதை கைப்பற்றிய போது அவர் எதிர்ப்பு தெரிவித்து சோதனை குழுவினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிறையை தகர்த்துவிடுவேன் என்ற மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசார் ஆசிப் முஸ்தகீன் மீது உபா சட்டம் உட்பட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சமீபத்தில் சேலத்தில் வெடி மருந்துகளுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரி கோவைக்கு எடுத்துச்செல்வதாக டிரைவர் தெரிவித்திருந்தார். ஆனால் இன்றுவரை வெடி மருந்துகளை யார் எடுத்து வரசொன்னார்கள் என்ற தகவலை போலீசார் தெரிவிக்கவில்லை. தற்போது கோவை சிறையிலேயே ஐ.எஸ். அமைப்பின் கொடியை வரைந்து சிறைக்கைதி வைத்துள்ளார். எனவே விடியாத அரசு உடனடியாக கைதியின் பின்புலத்தை விசாரணை செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.