தென் தமிழகமான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கடும் மழை காரணமாக வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மீட்பு பணிகளை துரிதப்படுத்தாமல் இ.ண்.டி. கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பாகவே தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இந்த விடியாத திமுக அரசு செய்யவில்லை. மாறாக அக்கட்சியின் இளைஞர் அணி மாநாடு நடைபெறுவதற்காக ஒட்டுமொத்த அமைச்சர்களும் சேலத்தில் முகாமிட்டு பந்தல் போடும் பணிகளில் மும்முரமாக இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் கோவையில் ஒரு பார்க் திறந்து விட்டு டெல்லியில் நடைபெறும் இ.ண்.டி. கூட்டணி நடத்தும் ஆலோசனை கூட்டத்துக்கு சென்றுவிட்டார்.
கடந்த 16ம் தேதி முதல் மூன்று நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு நான்கு மாவட்டங்களையும் ஒரு வழி செய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் குளம் ஒன்று உடைந்து மழைநீர் முழுவதும் நகரப்பகுதியை மூழ்கடித்தது. அதிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மூழ்கியிருந்தது.
நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. உணவு, குடிநீர், மருந்து வசதி இன்றி மிகப்பெரிய துன்பத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர். திமுக அமைச்சர்கள், மேயர், எம்.எல்.ஏ.க்கள் என ஒருவர் கூட இல்லை என பொதுமக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
பாஜக துணைத் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான நயினார் நாகேந்திரன் மட்டுமே வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தார். மற்ற திமுக எம்.எல்.ஏ., எம்.பி., மேயர் என அனைவரும் சேலத்தில் முகாமிட்டிருந்தனர். இது பற்றி நெட்டிசன்கள் கடுமையான விமர்சனத்தை வைத்தனர். மழையால் மக்கள் உடமைகளையும், உயிர்களையும் இழக்கும் நேரத்தில் கூட திமுகவின் இளைஞர் மாநாடு முக்கியமாக என கேள்வி எழுப்பினர். அது மட்டுமின்றி தென்னகத்தை மழையால் மூழ்கடித்துவிட்டு டெல்லி சென்ற நீரோ ஸ்டாலின் என டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மழை வெள்ளப்பாதிப்புகளை எடுத்துக்கூறி, கூடுதலான மீட்பு படைகளை விரைந்து அனுப்ப கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி முப்படைகளையும் களம் இறக்க அமித்ஷா உத்தரவிட்டார். அதன்படி மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைவரும் மத்திய அரசின் துரித நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.