ஆர்எஸ்எஸ் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு நேற்று (டிசம்பர் 18) முதல் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் அதி கன மழையால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நீரால் சூழ்ந்து முற்றிலும் போக்குரவத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிகப்பெரிய துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் இவ்வளவு பெரிய பேரிடரை சந்தித்து வரும் வேளையில் முதல்வர் ஸ்டாலின் தென் மாவட்ட மக்களை சந்திக்காமல் கோவையில் ஒரு பூங்கா ஒன்றை திறந்து வைத்துள்ளார். இது தற்போதுதான் தேவைதானா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டுமின்றி இ.ண்.டி. கூட்டணி நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுவிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நேரம் இல்லை.
இந்த நிலையில், சென்னையில் உதவியதை போன்று தற்போது தென் மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி நகருக்கு உணவு தயாரித்து வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 பேருக்கு இன்றிலிருந்து (டிசம்பர் 18) உணவு வழங்கப்படுகிறது. இவை மேலும் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. மட்டுமே முதல் ஆளாக களம் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.