டெல்லியில் நேற்று (டிசம்பர் 19) இ.ண்.டி. கூட்டணி கூட்டத்தில், ‘‘ஹிந்தி தேசிய மொழி, எல்லோருக்கும் ஹிந்தி புரிய வேண்டும். ஆங்கிலம் என்பது பிரிட்டிஷ் ஆட்சி இந்தியர்கள் மீது திணித்தது’’ என ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ்குமார் திமுக மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மக்களை ஏமாற்றுவதற்காக தங்களது கூட்டணிக்கு “இண்டியா” என காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் பெயர் வைத்தன. ஏற்கனவே மூன்று கூட்டத்தை இவர்கள் நடத்தினார்கள். ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக மிகப்பெரிய மூன்று மாநிலங்களிலும் வெற்றிவாகை சூடியது. இதனால் அடுத்து வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வரும் என அனைத்து முன்னணி ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து இண்டி கூட்டணி கலகலத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 19) டெல்லியில் தனது நான்காவது கூட்டத்தை நடத்தியது. அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, பீஹார் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் மற்றும் சில கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது இந்த கூட்டத்தில் திமுக மீது நிதிஷ்குமார் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது: இந்த கூட்டத்தில் நிதீஷ்குமார், ஹிந்தியில் பேசத் துவங்கினார். அப்போது அவர் பேசுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக்கூறும்படி டி.ஆர்.பாலு ஐக்கிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜாவிடம் கூறினார். அவரும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறினார்.
இதனால் கோபம் அடைந்த நிதீஷ்குமார், ‛‛ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி. ஆகையால் தி.மு.க., தலைவர்கள் ஹிந்தியை கற்க வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு சென்ற போதே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்தும் போய்விட்டது’’ எனக் கூறியதுடன் மனோஜ் ஜா மொழி பெயர்த்து கூறுவதையும் நிறுத்தும்படி உத்தரவிட்டார். இதனால் இ.ண்.டி. கூட்டணியை விட்டு நிதீஷ் வெளியேறலாம் எனக் கூறப்படுகிறது.
பாட்னாவில் இ.ண்.டி. கூட்டணியின் முதல் கூட்டத்தை நடத்தியவர் நிதீஷ்குமார். ஆனால் கூட்டணியில் தனக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடாகத்தான் ஸ்டாலின், டி.ஆர்.பாலு மீது கோபத்தை நிதீஷ்குமார் வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பிறகு அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த கூட்டத்தில் நிதீஷ்குமார் பங்கேற்கவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இ.ண்.டி. கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை யாருமே முன்மொழியவில்லை. எனவே கூட்டணியில் இருந்து பீஹார் மாநிலத்தில் ஜே.டி.யூ., ஆர்.ஜே.டி., கட்சிகள் வெளியேறலாம் எனக் கூறப்படுகிறது.
விரைவில் ஊழலுக்காக ஒன்று சேர்ந்த இ.ண்.டி. கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள். மக்கள் அக்கூட்டணியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகி வருகிறது.