பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
பா.ஜ.க. கட்சித் தலைமையகத்தில் தேசிய நிர்வாகிகள் கூட்டம் இரண்டாவது நாளாகத் நேற்று (டிசம்பர் 22) நடைப்பெற்றது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான தயார்நிலை பற்றியும், கட்சியில் வரவிருக்கும் திட்டங்களுக்கான வியூகங்களை வகுப்பதற்கும் பா.ஜ.க., தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநிலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பிற அணியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
மக்களுடனான பாஜகவின் தொடர்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை விரிவாக விளக்குவது குறித்து அவர்களுடன் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.