கேரளாவில் உள்ள சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு எவ்வித அடிப்படை வசதியையும் கம்யூனிஸ்ட் அரசு செய்து தரவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
தமிழகம் மற்றும் நமது நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு போன்ற எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கேரள அரசு செய்து கொடுக்கவில்லை.
கம்யூனிஸ்ட் அரசு தூக்கத்தில் உள்ளது. லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் பல மணி நேரம் சிக்கித்தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படுவதையும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி அவர்கள் சிரமப்படாமல் இருப்பதை கேரள கம்யூனிஸ்ட் அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும். சிக்கித் தவிக்கும் பெரும்பாலான பக்தர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் பாதுகாப்பிற்காக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தங்களின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் அரசை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
கேரளாவில் சிக்கித் தவிக்கும் பக்தர்களுக்கு இதுவரை எந்த அரசியல் கட்சிகளில் தலைவர்களும் குரல் கொடுக்காத போது தலைவர் அண்ணாமலை குரல் கொடுத்திருப்பது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.