உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் அழைப்பிதழ் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்திலும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வழங்கும் பணியை பாஜக துவக்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று (31.12.2023) சென்னையில் ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வீடு, வீடாக சென்று அழைக்கும் பணி கோபாலபுரம் வேணுகோபாலசாமி சன்னதியில் பூஜையுடன் தொடங்கி முதல் வீடாக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் இல்லத்தில் அழைப்பிதழை பாஜக அமைப்பு செயலர் கேசவ விநாயகன் கொடுத்து துவங்கினார்.