ராமர் கோவில் கும்பாபிஷேகம் : பக்தர்களின் இல்லங்களில் அழைப்பிதழ் வழங்கிய தலைவர் அண்ணாமலை!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு பக்தர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பிதழ் வழங்கினார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று நமது பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.

பகவான் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் அறிவுரையின்படி, கும்பாபிஷேகப் பெருவிழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது. சென்னையில் இன்று, எனது இல்லத்தின் அருகில் வசிப்பவர்கள் இல்லங்களுக்கு நேரில் சென்று, ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கினோம். ஒரு ஒப்பற்ற பெருவிழாவாவில், அனைவரின் வருகையையும் பங்களிப்பையும் வேண்டுகின்றோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top