மருது பாண்டியர்களை அவமதித்த ‘ஜிகாதி’ ஆதரவாளருக்கு விருது வழங்கிய ஸ்டாலின்: அதிர்ச்சியில் மக்கள்!

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். இதில் முக்கியமானது ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க’ விருது. ஆனால் இந்த ஆண்டு ஜிகாதிகளுக்கு ஆதரவாகவும், போலி செய்திகளையும், வெளியிட்டு வரும் ஆல்ட்நியூஸ் முகமது ஜுபைருக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மாபெரும் புரட்சி செய்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி தூக்குமேடை ஏறியவர்கள் தான் மருது சகோதரர்கள். இத்தனை பெருமை வாய்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த மருது சகோதரர்களை, தற்போது விருது வாங்கிய முகமது ஜுபைர் சமூக வலைத்தளத்தில் மருது சகோதரர்களை பற்றி விமர்சனம் செய்து தரக்குறைவாக பதிவிட்டார். அது பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில், சுதந்திரத்திற்காக போராடி ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீரமரணமடைந்த மருது சகோதரர்களை கேலி செய்தவருக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்திருப்பது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலினுக்கு உண்மையாகவே தேசப்பற்று இருந்தால் முகமது ஜுபைருக்கு அளிக்கப்பட்ட விருதை திரும்ப பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இணையவாசிகளும், தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top