பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு பாட்னா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். கொரோனா, டெங்கு, மலேரியா போன்று சனாதானத்தை ஒழிப்பதே மேல் என பேசியிருந்தார்.
இவரது பேச்சு நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் மீது உத்திரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலும், உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரிகா வஹாலியா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற பிப்ரவரி 13ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.