மதரஸா பாடத்திட்டத்தில் சமஸ்கிருத மொழியுடன் ராமாயணம்: உத்தராகண்ட் வக்பு வாரிய தலைவர்!

உத்தராகண்ட் மாநில மதரஸா பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வக்பு வாரிய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மதரஸா எனப்படும் இஸ்லாமியர்களுக்கான கல்வி நிறுவனங்கள் வழக்கமான பாடதிட்டங்களுடன் இஸ்லாம் மதம் பற்றி கற்பிக்கப்படுகிறது. இதில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 117 மதரஸாக்களின் பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி முதலில் டேராடூன், ஹரித்வார், நைனிடால், உதம் சிங் நகரில் உள்ள மதரஸாக்களில் வரும் கல்வி ஆண்டு முதல் ராமாயண கதைகள் தொடர்பான புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது பற்றி உத்தராகண்ட் வக்பு வாரிய தலைவர் கூறும்போது; இந்திய கலாச்சாரம் மற்றும் உண்மையான மதிப்புகளை எடுத்துரைக்கும் காவியம் ராமாயணம் ஆகும். இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையாக விளங்கும் ராமரின் குணநலன்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளோம். வக்பு வாரியத்தின் கீழ் இயங்கும் 117 மதரஸாக்களிலும் சமஸ்கிருத  மொழியுடன் ராமாயணம் குறித்த பாடங்களை கற்பிக்க உள்ளோம். அப்போது தான் மாணவர்கள் தங்கள் கலாச்சாரத்துடன் இணைய முடியும். இது நமது பாரம்பரியத்தை நிலை நிறுத்தவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் முடியும். இவ்வாறு வக்பு வாரிய தலைவர் ஷதாப் ஷாம்ஸ் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top