புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை இன்று (பிப்ரவரி 02) தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்தி புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.