கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆட்சி (காங்கிரஸ் கூட்டணி) காலத்தின் பொருளாதார சீர்குலைவு பற்றி மக்களைவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து கடந்த 10 ஆண்டுகாலமாக நல்லாட்சியை வழங்கி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பல கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2014ஆம் ஆண்டு வரை நமது நாடு எந்த நிலையில் இருந்தது. இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்து பார்க்க துவே சரியான தருணமாகும். இதன் மூலம் 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளின் பொருளாதார சீர்குலைவு வெளிச்சத்துக்கு வரும்.
இதற்காக மத்திய அரசு மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது. 2014ஆம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகவும் பொறுப்பான வகையில் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. படிப்படியாக அரசு நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.
இதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்தது. முதலீடு அதிகம் ஈர்க்கப்பட்டது நாட்டுக்கு தேவையான முக்கிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசமே முதன்மையானது என்ற அரசின் கொள்கை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் நீடித்து வந்த பிரச்னைகளுக்கும் தடைகளுக்கும் முடிவு கட்டப்பட்டது. இப்போது நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத உன்னத நிலையை எட்டியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் நாட்டு மக்களுக்கு எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் ஆசியுடனும், பிரதமர் மோடியின் சீரிய வழிகாட்டுதலுடனும், மத்திய அரசு பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு சாதனைகளைப் படைத்து வருகிறது. இதன் காரணமாகவே கடந்த 2019ஆம் ஆண்டு மக்களைத் தேர்தலில் மக்கள் ஆதரவு அளித்து பாஜக அரசை மீண்டும் தேர்வு செய்தனர். இவ்வாறு நிதியமைச்சர் பேசினார்.