திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் கீதா ஊழல் குற்றச்சாட்டில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் துளசிராமன், திமுகவை சேர்ந்தவர் ஆவார்.
தனது மனைவி கீதா செய்ய வேண்டிய வேளைகளை துளசிராமன் கவனித்து வந்தார். அதாவது ஆக்டிங் ஊராட்சி தலைவராக அப்பகுதியில் வலம் வந்தார்.
ஊராட்சி வளர்ச்சி மேம்பாட்டு பணிகளில் கமிஷன், கட்டிட வரைபட அனுமதியில் கமிஷன், கட்டுமானப் பணியில் கமிஷன் என எதற்கெடுத்தாலும் துளசிராமன் கமிஷன் கேட்டு பொதுமக்களை நச்சரித்து வருவதாக அரசுக்கு புகார்கள் சென்றது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விசாரணை நடத்தினார். ஊராட்சி தலைவர் கீதா மன்றக் கூட்டங்களை நடத்தாமல் முறையற்ற தீர்மானம் நிறைவேற்றி ஏராளமான நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.
ஊராட்சி ஆக்டிங் தலைவராக துளசிராமன் வலம் வந்ததை கீதா கண்டு கொள்ளாமல் இருந்ததும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து கீதாவை ஊராட்சி தலைவர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஊராட்சி தலைவராக இருந்தாலம் சரி, அமைச்சராக இருந்தாலம் சரி ஊழல் செய்வது திமுகவிற்கு கைவந்த கலை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.