நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 06) திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மத்திய இணையமைச்சர் எல்.முருகனை தகுதியற்றவர் என அவமரியாதையுடன் பேசியிருப்பது அருந்ததியினர் சமூதாய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ள நிவாரணம் தொடர்பாக தி.மு.க எம்.பி.க்கள் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த போது பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில் அளிக்க முற்பட்டபோது தகுதியற்றவர் என்ற வார்த்தையை டி.ஆர்.பாலு உபயோகித்தார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பட்டியல் சமூதாயத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஆனால் திமுக அதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பட்டியல் சமூதாயத்தினரை தொடர்ந்து அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.
வேங்கை வயலில் பட்டியல் சமூதாயத்தினர் வசித்து வந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்து ஓராண்டாகியும் இன்று வரை குற்றவாளிகளை திமுக அரசு கைது செய்யவில்லை.
ஆனால் மத்திய அரசில் மொத்தம் 76 அமைச்சர்களில், 12 பேர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். 8 பேர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். எப்போதும் பட்டியல் சமூதாய மக்களின் பாதுகாவலர்களாக பாஜக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.