பிப்ரவரி 14 ஜிகாதி தாக்குதல்:கோவை மன்னிக்காது!

இஸ்லாமிய கைதிகளை திமுக அரசு விடுதலை செய்ததற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

குற்ற வழக்கில் தண்டனை பெற்று, 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் தி.மு.க அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

கடந்த 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 46 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய அபுதாஹீர், ஹாரூன், பாஷா, ஷாகுல், அமீது, குண்டு ஷாகீர், ஊமை பாபு ஆகியோர் தண்டனை பெற்று சிறையில் கடந்த 24 ஆண்டுக்கு மேலாக உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவு நாளையொட்டி இஸ்லாமிய கைதிகள் அபுதாஹீர், ஹாரூன் பாஷா, ஷாகுல் அமீது, குண்டு ஷாகீர், ஊமை பாபு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை திமுக அரசு பிறப்பித்துள்ளது.

கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் அப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட காரணமாக இருந்த இஸ்லாமிய கைதிகளை, வாக்கு வங்கிக்காக திமுக அரசு விடுதலை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திமுகவின் இந்த செயலுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக மீது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தலைவர் அண்ணாமலை, சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளின் விடுதலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். பயங்கரவாதத்திற்கு நிறமில்லை. தீவிரவாதத்தை ஒரு சமூகம், ஜாதி அல்லது மதத்திற்குள் மட்டும் நிறுத்திவிடவேண்டாம். கோவை குண்டு வெடிப்பை ஒரு தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். அவர்களை விடுதலை செய்வது ஆபத்து.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் பயங்கரவாதிகள்தான். தீவிரவாதம் அங்கே இருந்து போகவில்லை, இன்னும் இருக்கிறது.

அனைத்து இஸ்லாமியர்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் தற்போது விடுவிக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் அவர்களை வெளியே விடக்கூடாது என்கிறேன் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோ, இந்த விவகாரத்தை, நாங்கள் “மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்” என சபதம் எடுத்துள்ளனர்.

கோவை குண்டு வெடிப்பு கைதிகள் விடுதலை விவகாரம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் வலைத்தளத்தில் “கோவை மன்னிக்காது” என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

கோவையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலிப் பொதுக் கூட்டமும் இன்று நடைபெறுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top