‘என் மண், என் மக்கள்’ நிறைவு விழாவில் பிரதமர் மோடி: தலைவர் அண்ணாமலை தகவல்!

பா.ஜ.க., தொண்டர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தரையில் அமர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்டதாக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய தலைவர் அண்ணாமலை;

டெல்லியில் கடந்த இரண்டு நாட்கள் பாஜகவின் தேசிய பொதுக்குழுக். கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதில் கொண்டு வந்த இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 – இலக்கு, அதற்கு என்ன செய்தோம், என்ன செய்ய போகிறோம் என்ற தீர்மானம், மற்றுமொரு தீர்மானமாக எதிர்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல், அதை எப்படி இந்திய மக்கள் நினைக்கிறார்கள் என்ற தீர்மானம்,

மறுபடியும் மூன்றாவது முறையாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளார்கள் என்ற  பாஜகவின் மூத்த தலைவர்கள் கொண்டு வந்த தீர்மானம்,

மேலும் ஒரு சிறப்பு தீர்மானமாக இராமர் கோவில் கட்டியதற்கு, பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன என்று தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாஜக தொண்டர்கள், தலைவர்கள் சபதம் எடுத்துள்ளனர், அதில் இன்னும் 100 நாட்கள் கடுமையாக பணி செய்து, பாஜக 370- தொகுதிகளிலும், தேஜக கூட்டணி 400 எண்ணிக்கையில் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

கூட்டணிக் குறித்து நேரம் வரும் போது பேசப்படும் எனத் தெரிவித்தார்.

வருகின்ற 27-02-2024- மதியம் 2 மணிக்கு பல்லடத்தில் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் பிரதமர் மோடி இரண்டு நாள் தங்குகிறார்.

2024 தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்ட திருமாவளவன், சப்ப கட்டு கட்டுகிறார் எனத் தெரிவித்தார்.

பாஜக தொண்டர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தரையில் அமர்ந்து, பிரதமர் மோடியின் பேச்சை கேட்டதாக தெரிவித்தார். பாஜக கூட்டத்தில், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமாலும் அமரலாம், பிரதமர் மோடி அருகில் செல்லலாம் எனத் தெரிவித்தார். நானும் சாதாரண தொண்டன் தான் எனக் கூறி ,தான் தரையில் அமர்ந்ததற்கு விளக்கம் அளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top