சேலம் மாவட்டத்தில், குடிநீர் தொட்டியில் இறந்த நிலையில் குட்டி நாய்க்குட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ,பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ளது துட்டம்பட்டி. இந்த ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் பயன்படும் வகையில், நீர்தேக்கத் தொட்டி உள்ளது.
இந்த தொட்டியில் இருந்து ஆட்டையன்வளவு, கந்தாயி வட்டம், ஆரான்வட்டம், ஆப்பவட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்குக்கும் தண்ணீர் செல்கிறது.
இந்த நிலையில், தண்ணீரில் துர்நாற்றம் அடித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் விநியோகிப்பாளர் ஆறுமுகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்துத் தண்ணீர் தொட்டியை பார்த்த போது, தண்ணீரில் நாய்க்குட்டி ஒன்று சடலமாக மிதந்துள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இறந்த நாய்க் குட்டியை வெளியே எடுத்து போட்டனர்.
இதையடுத்து, தண்ணீர்த் தொட்டியில் நாய்க் குட்டியை அடித்துப் போட்ட மர்ம நபர்களைப் ,போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை இன்றுவரை, கைது செய்யாமல் விட்டதன் எதிரொலியாக, ஒவ்வொரு ஊர்களிலும் குடிநீர்த் தொட்டிகளில், நாய்க்குட்டி போடுவது, மற்றும் மலம் கலப்பது போன்ற செயல்கள் நடைபெறுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் இதுபோன்ற அவலம் தொடர்ந்து வருகிறது.