பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க, தமிழகம் ஆவலுடன் காத்திருப்பதாக தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளளார். பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27, 28ல் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தருகிறார்.
இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கும் ‘என் மண், என் மக்கள்’ பயணத்தின் நிறைவு நாள் விழா, வரும் பிப்ரவரி 27 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவிருக்கிறது.
தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுத்தும் இந்த மாபெரும் மாநாட்டின் ஏற்பாடுகளை, இன்று மாநிலப் பொதுச்செயலாளர் ஏபி.முருகானந்தம் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டோம்.
பாரதப் பிரதமர் மோடியை வரவேற்க தமிழகம் ஆவலுடன் காத்திருப்பதாக அண்ணாலை தெரிவித்துள்ளளார்.