நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தமைக்கு, தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
“நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ,அன்பைப் பெற்ற தலைவர்களில் ஒருவரான, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர், மரியாதைக்குரிய திரு ஜி.கே.வாசன் அவர்களை, தமிழக பாஜக பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு அரவிந்த் மேனன், அவர்களுடன் சந்தித்து, வரும் பாராளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடரும் அவரது முடிவுக்கு நன்றி தெரிவித்தோம்.
என்றுமே தேசியத்தின் பக்கம் நிற்கும், பெருமைக்குரிய பாரம்பரியமுள்ள அண்ணன் திரு ஜி.கே.வாசன் அவர்கள் மற்றும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரின் அனுபவமும், உழைப்பும், பாராளுமன்றத் தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.” என்று கூறியுள்ளார்.