செய்தியாளர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் : மத்திய இணையமைச்சர்  டாக்டர் .எல்.முருகன் கண்டனம்!

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செந்தில் ஆகியோர், திமுக நிர்வாகிகளால், அறைக்குள் அடைத்து வைத்து  தாக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இன்று, (பிப்ரவரி 29) பாலிமர் செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செந்தில் ஆகியோர், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளால், அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். சாமானியர் ஒருவரின் கருத்துச் சுதந்திரம் பற்றி, எதிர்க்கட்சியாக இருந்த பொழுது பக்கம் பக்கமாக பாடமெடுத்த ‘போலி திராவிட மாடல்’ அரசியல்வாதிகளே, போதைப் பொருள் கடத்துபவர்களை செய்தியாக்கச் சென்ற, செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது தான் கருத்துச் சுதந்திரமா?

கட்சிக்குள் புற்றீசல் போல் போதைப் பொருள் வியாபாரிகளை ஒளித்து வைத்திருப்பது, செய்தியாளர்களை அறைகளில் பூட்டி வைத்து தாக்குவது தான், ‘போலி திராவிட மாடல்’ அரசாங்கத்தின் புதிய கொள்கையா?

போதைப் பொருள் கடத்துபவனையும், அதை விற்று சமூகத்தை சீரழிப்பவனையும் பாதுகாக்கிறதா இந்த ‘போலி திராவிடம்?’ எல்லோருக்கும் சமமான ஆட்சி செய்வதை விடுத்து, தன்னுடைய அடியாட்களை செய்தியாளர்கள் மீது ஏவி விடுதல் தான் ‘போலி திராவிடம்’ வகுத்திருக்கும் புதிய புரட்சியா? இதுதான் தாங்கள் சொன்ன ‘விடியலா?’

இன்று கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள ‘பாலிமர்’ செய்தியாளர்கள் போல், தொடர்ச்சியாக செய்தியாளர்களிடமும், தவறை தட்டிக் கேட்கும் சாமானியர்களிடமும், அராஜகம் செய்து வரும் இந்த ‘போலி திராவிட மாடல்’ அரசாங்கத்தை, மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top