மேற்கு வங்கத்தில் உள்ள 17 லட்சம் போலி வாக்காளர்கள் அடங்கிய பட்டியலை ,மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார்.
மேற்கு வங்கத்தில் அமைந்திருக்கும் தலைமைத் தேர்தல் அலுவலகத்துக்கு சென்ற எதிர்கட்சி தலைவரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான சுவேந்து அதிகாரி, போலி வாக்காளர்கள் பெயர்கள் அடங்கிய 24 பைகளை எடுத்து சென்று சமர்ப்பித்தார். மொத்தம் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை 16,91,132 என்று கூறினார்.
இந்தப் பட்டியலில் இறந்த வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்து சென்றவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் பலமுறை வெவ்வேறு இடங்களின் பட்டியல்களிலும் இடம்பிடித்த பெயர்களும் ஏராளமாக இருந்துள்ளன.
அத்துடன், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு இடையே உள்ள வாக்கு வித்தியாசத்துக்கு, கிட்டத்தட்ட சமமான அளவில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் கூறினார்.
மார்ச் மாதத்தில் மேற்கு வங்காளத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இருக்கும் தேர்தல் ஆணையம் , தனதுசார்பில், அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து கருத்துக்களை கேட்டறிய உள்ளது. அப்போது போலி வாக்காளர்கள் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய குழுவிடம் தெரிவிப்போம் எனவும் கூறினார்.
மேற்கு வங்கத்தில் போலி வாக்காளர்களை வைத்துக்கொண்டுதான் மம்தா பானர்ஜி வெற்றிப் பெற்றாரா என்ற கேள்வி தற்போது எழுகிறது. வரஉள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.