சீன ராக்கெட் உடன் திமுக அமைச்சர் விளம்பரம் வெளியிட்டதை கிண்டல் செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் தமிழக பாரதிய ஜனதா கட்சி வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டகுலசேகரப்பட்டினத்தில், ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.இது தொடர்பாக திமுக அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பின்னணியில் ,சீன நாட்டின் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம்பெற்றிருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
பிரதமர் நரேந்திர மோடி, திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இதனை குறிப்பிட்டு, திமுகவின் தேசப்பற்று இதுதானா என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 1) பிறந்தநாள் கொண்டாடும் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அந்த வகையில் தமிழக பாஜக தரப்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு சீனாவின் ஆட்சி மொழியான மாண்டரின் மொழியில் வாழ்த்து தெரிவித்து கிண்டலாக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், தங்களின் விருப்பமான மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழட்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசப்பற்று இல்லாத திமுகவினருக்கு ,அவர்களின் பாஷையில் பதில் சொன்னாலாவது மண்டையில் ஏறுதா என்று பார்க்கலாம்.