தமிழகத்தில் இன்று (01.03.2024) முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்;
இன்று பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு, உங்கள் பள்ளிக் கல்வியின் இத்தனை ஆண்டுகள் கடின உழைப்புக்கு நற்பலன்கள் கொடுக்கவிருக்கும் தேர்வு. நீங்கள் ஒவ்வொருவருமே தனித்திறன் படைத்தவர்கள்.
அனைவருக்கும் சிறந்ததொரு எதிர்காலம் உருவாக்குவதாக, இந்தத் தேர்வுகள் அமையட்டும். மாணவச் செல்வங்கள், இந்தத் தேர்வுகளின் மூலம், உயர்கல்வியில் தங்களுக்கு விருப்பமான துறைகளைத் தேர்ந்தெடுத்து, பல சாதனைகள் படைக்க எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.