டெல்லியில் இருந்து தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்கள் மூலம், போதைப் பொருட்கள்நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சர்வதேச அளவில் ரூ.2,000 கோடி என கூறப்படுகிறது.
இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது, சினிமா தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என தெரிய வந்தது. அதன்படி கடந்த 23-ம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவு ஆகிவிட்டார். மேலும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஜாபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.