மேற்கு வங்கத்தில், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஒரு சிறுமியிடமிருந்து, ஜெகநாதர் ஓவியத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பல நலத்திட்டப் பணிகளைத் தொடங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 1ம் தேதி இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அங்கே அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட பின்னர் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது மேற்கு வங்கத்தில் பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தின் நடுவே, ஒரு சிறுமி ஜெகநாதர் ஓவியத்தைப் பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி காண்பித்தவாறு நின்றுக் கொண்டிருந்தார். பிரதமர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும்போது அந்த சிறுமியை கவனித்தார்.
உடனடியாக தனது பாதுகாவலரிடம் சிறுமியிடம் உள்ள ஓவியத்தை வாங்கி வருமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சில நிமிடங்களில் சிறுமியிடம் இருந்த ஓவியத்தை பாதுகாவலர்கள் பெற்று வந்து பிரதமர் மோடியிடம் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து ஓவியத்தைப் பெற்றுக்கொண்டேன் என்று அந்த சிறுமிக்கு மேடையில் வாக்குறுதி அளித்தார். இந்த வீடியோ அனைத்து தரப்பு மக்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் நடுவே சிறுமி வைத்திருந்த ஓவியத்தை கவனித்து பிரதமர் மோடி பெற்றுக்கொள்கிறார் என்றால் எந்த அளவிற்கு பெண் குழந்தைகள் மீதும் பொதுமக்கள் மீதும் அன்பும், பாசமும் வைத்திருப்பார் என்பதை இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.