பா.ஜ.க.,வில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!

கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளன. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக பாரதம் உருவெடுத்துள்ளது. உலகளவில் பாரதத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இவை அனைத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி அயராது உழைத்து வருவதே  காரணம்.அவரின் கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக, மாற்றுக்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். மேலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தேசத்திற்கு பணியாற்றுவதற்காக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைகின்றனர்.

அந்த வகையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
கடிதத்தின் நகல்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோருக்கு அனுப்பினார்.

இந்த நிலையில், மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் முன்னிலையில் ,கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஊழல் அரசை அகற்றுவதற்கான அடித்தளத்தை இந்த மக்களவைத் தேர்தலில் உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. மாநிலம் வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top