சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை துவக்கியும், செயல்படுத்தியுமுள்ளார். இதனால் மகளிர் மத்தியில் பிரதமர் மோடியின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது.
உலகமெங்கும் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 100 குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
“இன்று மகளிர் தினம். நமது அரசு எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைக்க முடிவு செய்துள்ளது. இது லட்சக்கணக்கான இல்லத்தரசிகளின் பொருளாதார சுமையை வெகுவாக குறைக்கும்.
குறிப்பாக நமது பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் விலை குறைவாக கிடைப்பதன் மூலம் குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும். பெண்களை வலிமைப்படுத்துவது மற்றும் வாழ்வியலை எளிமையாக்குவது என்ற நமது குறிக்கோளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளில் ஒன்று இது” என்று தெரிவித்துள்ளார்.