“பிரதமரை பற்றி பேச கனிமொழிக்கு எந்த அருகதையும் இல்லை” : அண்ணாமலை பதிலடி!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேச திமுக எம்.பி., கனிமொழிக்கு எந்த அருகதையும் இல்லை என தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை (மார்ச் 08) செய்தியாளரிடம் பேசிய தலைவர் அண்ணாமலை;

என்னை பொருத்தவரையில் எல்லா நாளும் பெண்கள் நாளாக தான் பார்க்கிறேன். 365 நாளும் பெண்களுக்கான நாள்தான் மகளிர் தின வாழ்த்துக்களை தனியாக தெரிவிக்க வேண்டும் என்று இல்லை. ஒரு காலத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பேசியது எல்லாம் மாறி பெண்கள் தான் இந்தியாவை இன்று முன்னின்று வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு நமது நாடு மாறியுள்ளது நமது சகோதரிகள் மென்மேலும் வளர வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பெறுவதற்காகவும் மேலும் உரிமைகளை பெற போராட்டங்கள் நடைபெற்றது அது மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது. அப்படியே இங்கும் அது கடைபிடிக்கப்படுகிறது.

எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,

பிரதமரை பொறுத்த வரையில் மோடி சிலிண்டர் மூலமாக இணைப்பு பெற்றவர்களுக்கு 300 ரூபாய் மானியமாக இருந்தது 400 ரூபாயாக மாறி உள்ளது மற்றவர்களுக்கு 200 ரூபாய் மானியமாக இருந்தது 300 ரூபாயாக மாறி உள்ளது.

ஆனால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டர் விலை குறைப்போம் என கூறி வந்தார்கள்.  இதுவரையில் எதுவும் குறைக்கவில்லை, ஆனால் பாரதப் பிரதமர் தொடர்ந்து நமது தாய்மார்களுக்கு தற்பொழுதும் சிலிண்டர் விலையை குறைத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

கனிமொழி அவர்கள், அவர்களுடைய அப்பாவின் வீட்டில் உள்ளார். சொந்தமாக சம்பாதித்து காடு மேடு சென்று விவசாயம் பார்த்து சம்பாதித்தாரா? கருணாநிதியின் மகள் என்பதை வைத்து ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. அவர்கள் சொந்தமாக என்ன உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்? நான்
உழைத்துக் கொண்டிருக்கிறேன், நீங்களும் (பத்திரிகையாளர்கள்) உழைக்கிறீர்கள், கனிமொழி என்ன உழைக்கிறார்கள், அப்பாவின் பெயரை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார் அவர்கள் பிரதமரை பார்த்து சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என சொல்வதற்கு ? எதையும் சொல்வதற்கு முன்பு ஒரு முறை கண்ணாடியில் முகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். எத்தனை வழக்குகள் உள்ளது, எத்தனை முறை சிறை சென்றுள்ளார்கள் என்பதையும் ஒரு முறை யோசிக்க வேண்டும் கனிமொழி இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும்.

எப்பொழுது சீனா கொடிக்காக பேச ஆரம்பித்தார்களோ, அப்பொழுது அவர்கள் 200 ரூபாய் ஊப்பியாக மாறிவிட்டார்கள். யாரிடம் எப்படி பேச வேண்டும் பிரதமரை பற்றி பேசுவதற்கான அரை சதவீதம் தகுதி கூட அவரிடம் இல்லை.

டெல்லிக்கு சென்று வந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,

பாஜகவின் இறுதி பட்டியலை எடுத்துக்கொண்டு நான் டெல்லிக்கு செல்லவில்லை. கட்சி வளர்ச்சி குறித்து பேசுவதற்காக, பிரதம மந்திரி நிகழ்ச்சிக்காக போயிருக்கலாம். அதனால் என்னுடைய வேலையை நீங்கள் பார்க்க வேண்டாம். இறுதிப்பட்டியல் வெளியாகும் போது கண்டிப்பாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவிப்பேன்.

பாஜக சார்பில் பிரதமர் வருகையின்போது சாலை வரவேற்பு ஏற்பாடு செய்யவே இல்லை என கேள்வி எழுப்புகின்றனர்;
இதை பாஜக பார்த்துக் கொள்ளும் அல்லது திமுக கவலைப்படும், நீங்கள் கவலைப்பட வேண்டாம் .தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தரஉள்ளார் என்றார்.

அதனைத் தொடர்ந்து டிஜிபியை பலிகடா ஆக்குவதற்கு திமுக முயற்சிக்கிறது. திமுக தான் போதைப் பொருள் கடத்தல் பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டும். ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியில் இருந்து கொண்டு வெளிநாட்டில் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலமாக போதைப்பொருளை விற்பனை செய்துள்ளார்.

இதற்கு பதில் திமுக அளிக்க வேண்டும் இதற்கு டிஜிபி ஏன் பேச வேண்டும், போதைப் பொருள் விலை குறைவுதான் அவ்வளவு விலையில்லை என்றெல்லாம் பேசுகிறார். இது தேவையற்றது சைலேந்திர பாபுவை இப்படித்தான் கோயம்புத்தூரில் சிலிண்டர் வெடித்ததாக பேச வைத்தார்கள். இது குறித்து திமுக நபர்கள் தான் பேச வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின், ஜாபர் சாதிக் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ஏன் அதை நீக்கினார். திமுகவின் அங்கத்தில் இருப்பவர்கள் நடந்த தவறு என்ன என்பதை திமுக தான் கூற வேண்டும். டிஜிபி விளக்கம் அளிக்கத் தேவையில்லை.

டிஜிபி மீது குற்றம் சுமத்தவில்லை, அவர்கள் போட்டோ எடுக்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து போட்டோ எடுக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இதற்கு டிஜிபி விளக்கம் கொடுப்பதை விட திமுக தான் மக்கள் மன்றத்தில் பேச வேண்டும்.

இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top