இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இம்மாதம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள்.
இந்த நிலையில், ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்; “அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்” என்று வாழ்த்தி உள்ளார்.