சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தியதற்கு மத்துவா இன மக்கள் கொண்டாட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) மத்திய அரசு அமல்படுத்தியது. இச்சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்

நாம்சூத்ராக்கள் இனத்தின் மதுவா சமுதாயத்தினர் 1960களில் பெருமளவில் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடியேறினர். மதம் என்பது போதை என்று கூறும் காரல் மார்க்ஸ் புத்திரர்கள் கூட இந்த சமூகத்தின் ஆன்மீக குரு போரம்மா என்று அழைக்கப்படும் பினபானி தேவி அவர்களின் பாதம் தொட்டு வணங்கினர் .இந்த சமூகத்தின் உதவியோடு தான் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை அப்புறப்படுத்தியது . ஆனால் இடம்பெயர்ந்து வந்த அவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி உதட்டளவில் உதவியதே தவிர கடைசிவரையில் உண்மையாக உதவவில்லை .

காங்கிரசில் இருந்து பிரிந்த மமதாவும் தனது அரசியல் அபிலாசைகளுக்கு இந்த சமூகத்தை பயன்படுத்திக் கொண்டார் அவரும் இவர்களின் துணை கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியை மாநில ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தினார். 2009 பொதுத் தேர்தலிலும் 2011 சட்டமன்றத் தேர்தலிலும் இவர்களுக்கு குடியுரிமை பெற்று தருவதாக மமதா உறுதியளித்தார் சென்ற மோடியின் ஆட்சியில் 2018 இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டபோது மமதாவும், கம்யூனிஸ்டுகளும் மசோதாவை ஆதரிக்கவில்லை இதுதான் இவர்களின் இரட்டை வேடம். ஜிகாதிகளின் வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மமதா ஆகிய மூன்று கட்சிகளும் மூழ்கிப் போனார்கள்.

தற்பொழுது பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதை தொடர்ந்து மத்வா இன மக்கள் தங்களது உரிமையினை பெறுகின்றனர். அவர்கள் ஆட்ட பாட்டத்துடன் மேளம் அடித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர் மிக நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேறியதாகவும் அதற்காக பாஜக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top