போதையில்லா  தமிழகம்  : பா.ஜ.க., விழிப்புணர்வு பிரசாரம்: ஆர்வமுடன் பங்கேற்கும் பொதுமக்கள்!

போதைப் பொருளுக்கு எதிராக இணையதளம் வாயிலாக தமிழக பாரதிய ஜனதா கட்சி பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச் 12) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார். அப்போது பாஜக சார்பில் 50,000 பூத் கமிட்டி அமைக்கப்பட்டு போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக பாஜக சார்பில், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் https://drugfreetamilnadu.com/  என்ற இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது.

அதில், ‛‛வாரத்தில் 15 மணி நேரம், போதைப்பொருளுக்கு எதிரான பிரசாரத்தை மேற்க்கொள்வதுடன், போதைப்பொருளுக்கு எதிராக இணைந்து பணியாற்றுவோம். இளைஞர்கள் மத்தியில் போதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கிராமம் முதல் நகரங்கள் வரை செல்வோம். தீர்வு காண துணை நிற்போம். போதைப்பொருள் கலாசாரத்தை ஆதரிக்கும் தி.மு.க.,வை விரட்டுவோம். போதை கலாசாரத்தில் இருந்து தமிழகத்தை காப்போம்” என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, அதில் பெயர், மொபைல் எண், இமெயில், முகவரி, தொகுதி ஆகிய விவரங்களை கொடுத்தால் தலைவர் அண்ணாமலை கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதனை அந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இளைய சமுதாயத்தினரை பாதுகாக்க பாஜக முன்னெடுத்துள்ள இப்பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top