தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (மார்ச் 15) கைது செய்தனர். டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 16) டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.