காவல்துறையா ?  ஏவல்துறையா ? திமுகவுக்கு தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

காவல்துறையை, தங்கள் ஏவல்துறையாகப் பயன்படுத்தும் போக்கை, திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் திமுகவின் இரட்டை வேடங்களையும், பிரிவினைவாத அரசியலையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருபவர் மீஞ்சூர் சலீம். இவரை தற்போது பெங்களூரு விமான நிலையத்தில் திமுக அரசின் காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“திமுகவின் இரட்டை வேடத்தையும், பிரிவினைவாத அரசியலையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த சகோதரர் மீஞ்சூர் சலீமை (minjur saleem) பெங்களூரு விமான நிலையம் வரை சென்று கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் தரங்கெட்ட திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

போதைப் பொருள்கள் விற்பவர்களுக்கும், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், கட்சிப் பதவி கொடுத்து அழகு பார்க்கும் திமுக, சமூக வலைத்தளங்களில் திமுகவை விமர்சிப்பவர்களை மட்டும், வெளிமாநிலங்களுக்குக் கூட, தேடிச் சென்று கைது செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழகக் காவல்துறை, திமுக ஆட்சியில், சமூக விரோதிகளை எல்லாம் விட்டுவிட்டு, சமூக வலைத்தளங்களின் குரலை முடக்க மட்டுமே பயன்படுத்தப்படுவது, வருத்தத்திற்குரியதும், காவல்துறையின் மாண்பை களங்கப்படுத்துவதும் ஆகும். காவல்துறையை, தங்கள் ஏவல்துறையாகப் பயன்படுத்தும் போக்கை, திமுக இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top