தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் கூட்டணியை முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்துக் கட்சிகளுடன் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க., 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
பா.ஜ.க: 20
பா.ம.க:10
தமிழ் மாநில காங்கிரஸ்; 3
அமமுக: 2
ஐ.ஜே.கே.: 1
புதியநீதி கட்சிக்கட்சி; 1
இந்திய மக்கள் முன்னேற்ற கழகம்: 1
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்; 1
ஆக தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.