தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் தலைவர் அண்ணாமலை மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தானது.
இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.