ஊட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான டாக்டர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, வெளியில் இருந்த தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் சில தொண்டர்கள் காயமுற்றனர்.
நீலகிரி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் 2ஜி ஊழல் செய்த ராசா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 25) பாஜக மற்றும் கூட்டணி கட்சித் நிர்வாகிகள், தொண்டர்களுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் தலைவர் அண்ணாமலை சென்றார்.
அப்போது பல ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் வந்திருந்தனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர் போலீசாரை ஏவி விட்டு, பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர்.
போலீசாரின் தடியடியில் ஏராளமான பாஜக தொண்டர்கள் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காயமுற்ற தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறிய மாநில தலைவர் அண்ணாமலை, ‘‘ஊட்டி எஸ்.பி சுந்தர வடிவேல் பணியிடை நீக்கம் செய்யும்வரை போராட்டம் தொடரும்’’ எனக் கூறி மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் எஸ்.பி. சுந்தரவடிவேல், தலைவர் அண்ணாமலை முன்பு மன்னிப்பு கேட்டார். நாங்கள் செய்தது தவறு என்று கூறினார். இதனைத்தொடர்ந்து அண்ணாமலை தொண்டர்கள் முன்பு உரையாற்றினார். காவல்துறை செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டனர். எனவே நாம் காவல்துறைக்கு மதிப்பளித்து நமது போராட்டத்தை கைவிட்டு செல்ல வேண்டும் எனக்கூறினார். இதனால் சமாதானம் அடைந்த தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தின் போது பல ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் திமுக அரசின் அராஜகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நீலகிரி தொகுதியில் பாஜகவின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல், இது போன்று போலீஸை ஏவிவிட்டு தாக்குதல் நடத்துவது கண்டித்தக்கது என பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.