டெல்லி சிறையில் உள்ள காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை விடுவிப்பதற்காக, கடந்த 2014 மற்றும்- 2024 வரையில், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள குழுக்களிடம் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 134 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், அமெரிக்கா மற்றும் கனடாவில், ‘சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்’ என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பை தொடங்கி அதற்கு தலைமை வகித்து வருகிறார்.
இவர், அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர். பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கக்கோரி, இந்த அமைப்பினர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தனி நாடு கோரிக்கைக்கு எதிராக பேசும் தலைவர்களுக்கு அவ்வப்போது மிரட்டல் விடுப்பது பன்னூன் வழக்கம். மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் கைதாகி உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, இவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பன்னூன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2014ல் நியூயார்க்கில் உள்ள ரிச்மண்ட் குருத்வாராவில், காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார். அவருக்கு நாங்கள் செய்யும் நிதி உதவிக்கு பிரதிபலனாக, சிறையில் உள்ள எங்கள் அமைப்பின் தலைவர் தேவிந்தர் பால் சிங் புல்லாரை விடுவிப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
அதன் பின், 2014 – 22 வரையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 134 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளோம். ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டார்.
கெஜ்ரிவால் மீது பன்னூன் குற்றம் சுமத்துவது இது முதல்முறை அல்ல. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவு குழுக்களிடம் இருந்து, கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர், 50 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக கடந்த ஜனவரியில் தெரிவித்தார்.
சிறையில் உள்ள காலிஸ்தான் தலைவர்களை பிப்ரவரிக்குள் விடுவிக்கவில்லை எனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
கடந்த, 1993ல் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில், ஒன்பது பேர் உயிரிழந்தனர், 31 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு காரணமான ‘சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்’ அமைப்பை சேர்ந்த தேவிந்தர் பால் சிங் புல்லார், ஜக்திஷ் சிங், மன்ஜீத் சிங் ஆகியோர் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இவர்களை விடுவிக்கத் தான், கெஜ்ரிவால் பணம் பெற்றுக் கொண்டதாக பன்னூன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இ.ண்.டி. கூட்டணியில் உள்ள கெஜ்ரிவால் பயங்கரவாதிகளை விடுவிக்க ரூ.134 கோடி பணம் பெற்றிருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்கி இப்படி பயங்கரவாதிகளிடம் கூட பணம் பெற்றுள்ளாரே இவரை போய் முதல்வராக தேர்வு செய்து விட்டோமே என டெல்லி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.