அருணாச்சலில் உள்ள சில பகுதிகளில் சீனா பெயரை வெளியிட்டுள்ளதாக சில ஊடகங்கள் தகவல் பரப்பி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா? அருணாச்சல பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒரு அங்கம்தான். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களில் பெயரை சீனா மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது; எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவம் கண்காணிப்பில் உள்ளது என்றார்.