டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை, ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில், கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுபடுத்தப்பட்டார். அவரை, மார்ச் 28 வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. பின்னர், மார்ச் 28-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஏப்ரல் 1-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 01) அவர் மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வருகிற 15-ஆம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.