கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட செட்டி வீதியிலுள்ள அதிர்ஷ்ட விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று (ஏப்ரல் 03) தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை பேசியதாவது:
நான் கோவை மக்களுக்கு நன்கு அறிமுகமானவன். உங்களில் ஒருவன் நான். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க மாட்டேன். உங்களுக்கான தேவை என்ன என்பதை முழுமையாக உணர்ந்தவன்.
அதனால் நீங்கள் கேட்காமலேயே உங்களது தேவையை அறிந்து நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன் என்று, ‘மேமு எப்புடுமே மீ கூட’ (நாங்கள் எப்போதுமே உங்களுடன்) என்று தெலுங்கு மொழியில் பேசினார்.
அப்போது திரண்டிருந்த வாக்காளர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். தெப்பக்குளம் மைதானத்தில் திரண்டிருந்த வாக்காளர்களை பார்த்து, ஹிந்தியில் ‘மே ஆப்கா அண்ணாமலை ஹூன் ஹர்ஆப்கே பிரடிக்யா தமாரா கேளி ஹை’ (நான் உங்கள் அண்ணாமலை; உங்களது வாக்கு தாமரைக்கே) என்று பேசினார். அவரது ஹிந்தி பேச்சுக்கு திரண்டிருந்த வாக்காளர்கள் தங்களது வலது கை கட்டை விரலை உயர்த்திக் காண்பித்து ஆம் என்று ‘தம்ப்ஸ்அப்’ செய்தனர்.