இ.ண்.டி. கூட்டணி தலைவர்களில் பாதிப்பேர் ஜெயிலில் இருக்கின்றனர், மீதமுள்ள பாதிப்பேர் பெயிலில் (ஜாமினில்) இருக்கின்றனர் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிண்டல் செய்துள்ளார்.
ராஜஸ்தானில் இம்மாதம் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று உரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா;
எதிர்க்கட்சியான இ.ண்.டி. கூட்டணி குடும்பக் கட்சிகளின் கூட்டணியாகும், அதில் பாதி தலைவர்கள் சிறையில் உள்ளனர், பாதி பேர் ஜாமீனில் உள்ளனர். காங்கிரஸ் எல்லா இடங்களிலும் ஊழல் செய்துள்ளது.
r……………..
“ராகுல் காந்தி ஜாமீனில் இருக்கிறாரா இல்லையா? சோனியா காந்தி, சிதம்பரம், ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஜாமீனில் வெளியே இருக்கிறார்களா இல்லையா? அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் இருக்கிறார்களா இல்லையா?”
“இ.ண்.டி. கூட்டணியின் பாதி தலைவர்கள் சிறையில் உள்ளனர், பாதி பேர் ஜாமீனில் உள்ளனர்” என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தார்.
“இன்று, இந்தியாவின் எண்ணங்கள் என்னவென்றால், ஊழலற்ற அரசாங்கம் இருக்க வேண்டும். வளர்ச்சி சார்ந்த அரசாங்கம் இருக்க வேண்டும். மோடி ஜியின் தலைமையில் நாடு வேகமாக முன்னேறியுள்ளது. கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியின் மூலம், இந்தியா “வளர்ந்த நாடாக” நிற்க வேண்டும், என்றார்.
மோடியின் தலைமையில் கிராமங்களின் நிலைமை மாறியுள்ளது. மின்சாரம் இல்லாத 18,000 கிராமங்கள் இருந்தன, 2014 இல் மோடி பிரதமரான பிறகு அவை மின்மயமாக்கப்பட்டன.
பாஜக தலைமையிலான மத்திய அரசு செய்த வளர்ச்சிப் பணிகளால் 3.5 லட்சம் கிராமங்கள் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்படுவதால், 25 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளனர்.
ஏழைகள், ரிக்ஷாக்காரர்கள், டீ வியாபாரிகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் உட்பட 40 சதவீத மக்கள் தொகையில் 55 கோடி பேருக்கு கடுமையான நோய்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹ 5 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.