கோவை சோமனூரில் நேற்று (ஏப்ரல் 05) தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சோமனூரில் ஜவுளி சந்தை கொண்டுவரப்படும் என மத்திய அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கிறேன். விசைத்தறியாளர்களுக்கு உதவும் பவர் டெக்ஸ் திட்டம் கொண்டு வரப்படும். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு சுணக்கம் காட்டுகிறது. மக்களின் பிரச்னைகளை பாஜகவால் மட்டுமே தீர்க்க முடியும் என மக்கள் நம்புகிறார்கள்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. ப.சிதம்பரம், ராகுல்தான் வேலையில்லாமல் இருக்கின்றனர்; அவர்கள்தான் நாட்டில் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. பிரதமர் வருகை இன்னும் உறுதியாகவில்லை; முடிவானதும் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.